/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உலர்களத்தில் விரிசல் விவசாயிகள் அதிர்ச்சி
/
உலர்களத்தில் விரிசல் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 15, 2024 09:27 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கணேசபுரம் கிராமம். இங்கு திருவாலங்காடு செல்லும் சாலையில், உலர்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி 2023- -24ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வாயிலாக 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உலர்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டிமுடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், உலர்களத்தை சுற்றி அமைக்கப்பட்ட சுவர்கள் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
l திருவாலங்காடு பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மூன்றாண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இங்கு சின்னம்மாபேட்டை, வீரராகவபுரம், மணவூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஒருநாளைக்கு 150க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் விபத்தில் சிறு காயமடைந்தவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தின் கூரை விரிசல் அடைந்து உள்ளது.
மேலும் மழை பெய்தால் ஒழுகுவதால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற முறையில் கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.