/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துகோட்டையில் வெள்ளரி விற்பனை
/
ஊத்துகோட்டையில் வெள்ளரி விற்பனை
ADDED : மார் 07, 2025 01:55 AM

ஊத்துக்கோட்டை:கோடை காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இரவு நேரங்களில் பனி நீடித்து வரும் நிலையில், காலையில் வெயிலின் சூரிக்கதிர்கள் வெளிவர துவங்கியதும் பனி காணாமல் போய் விடுகிறது.
வெயில் கொளுத்தும் நிலையில், பல்வேறு காரணங்களால் வெளியே வரும் பொதுமக்கள் தங்களது தாகம் தீர்க்க அருகில் உள்ள குளிர்பான கடைகளுக்குச் சென்று தங்களது தாகத்தை தீர்த்து வருகின்றனர். வெயிலில் அதிகம் திரிவதால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது.
இவ்வாறு நீர்ச்சத்து குறைவதை கட்டுப்படுத்த குறைந்த விலையில் சில காய்கறிகள் உள்ளன. இதில் முதலில் வருவது வெள்ளரிக்காய். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முதன்மை பங்கு வகிக்கிறது. கோடையில் நீர்சத்து குறைவதை கட்டுப்படுத்து இந்த வெள்ளரிக்காய், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
ஊத்துக்கோட்டை பகுதியில் ஆங்காங்கே காணப்படும் வெள்ளரிக்காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ கணக்கில் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். தர்பூசணியும் விற்பனைக்கு வர துவங்கி உள்ளது.