/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இணைப்பு சாலை சேதம்: கும்மிடியில் விபத்து அபாயம்
/
இணைப்பு சாலை சேதம்: கும்மிடியில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 07, 2024 02:15 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை ஒட்டி, ஆந்திரா நோக்கி செல்லும் சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் இணைப்பு சாலை அமைந்துள்ளது. சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள், இந்த சர்வீஸ் சாலை வழியாக செல்கின்றன.
இப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால், சிறு மழை பெய்தாலும் சாலை சேதமாகிவிடும். தற்போது, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலை முழுதும் பரவி கிடக்கிறது. அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
அடுத்தடுத்து மழை பெய்தால், சாலை குண்டும் குழியுமாகும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக சர்வீஸ் சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, மழைநீர் வடிந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.