/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உபரிநீர் கால்வாய் சேதம் மழைநீர் வீணாகும் அவலம்
/
உபரிநீர் கால்வாய் சேதம் மழைநீர் வீணாகும் அவலம்
ADDED : ஜூலை 18, 2024 01:10 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 30 ஏக்கர் பரப்பளவை உடையது.
இந்த ஏரியின் உபரிநீர் வெளியேற, 20 ஆண்டுகளுக்கு முன் மதகு அருகே கால்வாய் கட்டப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் உபரிநீர் கால்வாய் சேதமடைந்து, அதன் வழியாக தண்ணீர் வீணாகி வருவதுடன், விவசாய நிலங்களையும் பாதிப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
மேலும், இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், தண்ணீர் வீணாகி வருவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சேதமடைந்த ஏரியின் உபரிநீர் கால்வாயை சீரமைக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.