/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்நல்லாத்துார் ஊராட்சியில் பள்ளி நுழைவாயில் துாண் சேதம்
/
மேல்நல்லாத்துார் ஊராட்சியில் பள்ளி நுழைவாயில் துாண் சேதம்
மேல்நல்லாத்துார் ஊராட்சியில் பள்ளி நுழைவாயில் துாண் சேதம்
மேல்நல்லாத்துார் ஊராட்சியில் பள்ளி நுழைவாயில் துாண் சேதம்
ADDED : மார் 28, 2024 08:51 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி.
திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் பள்ளிக்கு வரும் நுழைவாயில் பகுதியில் இரு துாண்கள் உள்ளன. இதில் நுழைவாயில் பகுதியில் இடதுபுறம் உள்ள துாண் மேல்பகுதியில் சேதமடைந்துள்ளது. இதனால் மாணவ மாணவியர் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த துாண் பகுதியை சீரமைக்க வேண்டுமென மாணவ மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.