/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அமிர்தாபுரம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அபாயம்
/
அமிர்தாபுரம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அபாயம்
அமிர்தாபுரம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அபாயம்
அமிர்தாபுரம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அபாயம்
ADDED : ஜூன் 24, 2024 11:39 PM

திருத்தணி : திருத்தணி—பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமிர்தாபுரம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால், மேல்திருத்தணி, பாபிரெட்டிப்பள்ளி, அமிர்தாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இதுதவிர இந்த ஏரிப்பாசனம் மூலம் அகூர் ஊராட்சி எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் பாபிரெட்டிப்பள்ளி விவசாயிகள் தங்களது நிலத்தில் நெல், வேர்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் ஏரியில் இருந்து திருத்தணி நகராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குமாரகுப்பம் மற்றும் மேல்திருத்தணி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் சிலர் ஏரியில் மீன் மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டுகின்றனர். இதுதவிர கட்டட கழிவுகள் மற்றும் குப்பைகளும் கொட்டுகின்றனர். இதனால் ஏரி தண்ணீரில் இறைச்சி கழிவுகள் கலப்பதால் குடிநீர் மாசுப்படும் அபாயம் உள்ளது.
எனவே ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தடுக்க வேண்டுகிறேன் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து ஊரக வளர்ச்சிதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரி, குளம், குட்டைகளில் இறைச்சி கழிவுகள் கொட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
அமிர்தாபுரம் ஏரியில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டக்கூடாது ஏரி அருகே வசிப்பவர்களிடம் பலமுறை எச்சரித்து வருகிறோம். விரைவில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது சட்டரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
செங்குன்றம், தண்டல் கழனி பகுதி அருகே, புழல் ஏரிக்கரையை ஒட்டி அணுகு சாலை உள்ளது. இங்கு, புழல், கிராண்ட்லைன் சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும், பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன.
இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இரவில் தெரு விளக்கு வெளிச்சமும் இன்றி, அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
மேலும், கழிவுகளுக்கு தீ வைக்கப்படும்போது ஏற்படும் புகை மண்டலத்தால், கண் எரிச்சல் உள்ளிட்டவற்றாலும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சாலை வழியாக செங்குன்றம், பாடியநல்லுாரை கடந்து செல்லும் வாகனங்களுக்கும், நல்லுார் சுங்கச்சாவடியில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை, அந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.
குறிப்பாக, செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு முதல், மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலையின் இருபக்க அணுகு சாலைகளும், மிக மோசமாக சேதமடைந்துள்ளன. இது குறித்து, புகார் செய்தாலும், தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம் காட்டுகிறது. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.