/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களால் ஆபத்து
/
சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களால் ஆபத்து
ADDED : ஜூலை 06, 2024 10:09 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் குடிநீர் பிரச்னை தீர்க்க, 110 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரும் பணி நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால் நகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் குடிநீர் குழாய் புதைப்பதற்கு சாலைகள் சேதப்படுத்தி பள்ளம் தோண்டப்பட்டது.
மேலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கும் சாலைகள் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளங்கள் முறையாக மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.
குறிப்பாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளான பெரியதெரு, மேட்டுத்தெரு, கீழ்பஜார் தெரு, காந்திரோடு மெயின் மற்றும்ராதாகிருஷ்ணன் தெரு ஆகிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் தோண்டி சரியாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, கலெக்டர் திருத்தணி நகரில் ஆய்வு செய்து, சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.