/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆபத்தான மேல்நிலை தொட்டியால் நடுக்குத்தகையில் விபத்து அபாயம்
/
ஆபத்தான மேல்நிலை தொட்டியால் நடுக்குத்தகையில் விபத்து அபாயம்
ஆபத்தான மேல்நிலை தொட்டியால் நடுக்குத்தகையில் விபத்து அபாயம்
ஆபத்தான மேல்நிலை தொட்டியால் நடுக்குத்தகையில் விபத்து அபாயம்
ADDED : பிப் 24, 2025 03:22 AM

நடுக்குத்தகை:பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, நடுக்குத்தகை ஊராட்சி. இங்கு, நாச்சியார் சத்திரத்தில் உள்ள ஆறு தெருக்களில் 350 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த 1980ல், நாச்சியார்சத்திரம் 6வது தெருவில், ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, நீர்த்தேக்கத் தொட்டியில் சிமென்ட் காரைகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது.
இதற்கு மாற்றாக, நாச்சியார் சத்திரம், வி.கே., நகரில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி, 15வது மத்திய நிதிக்குழு மானியம், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், 21.19 லட்சம் மதிப்பீட்டில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதேபோல், பழைய நீர்த்தேக்கத் தொட்டியில் தொடர்ந்து நீர் ஏற்றப்படுவதால், அது மேலும் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, நம் நாளிதழில் கடந்த ஜூலை மாதம் படத்துடன் செய்தி வெளியானது. ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், சரியான பதில் இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சிதிலமடைந்த பழைய நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

