/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செம்பரம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
/
செம்பரம்பாக்கம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
ADDED : ஜூலை 21, 2024 07:01 AM

குன்றத்துார்: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு, கிருஷ்ணா கால்வாய், சவுத்திரி கால்வாய், பங்காரு கால்வாய் ஆகிய மூன்று கால்வாய் வழியே, தண்ணீர் வருகிறது.
இந்த கால்வாய் வழியே, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் மற்றும் செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பன்சத்திரம் உட்பட பல கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
பல ஆண்டுகளாக இவ்வாறு கழிவுநீர் கலந்து வருவதால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் 100க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசடைந்துவிட்டது. அதனால் தான் மீன்கள் செத்து மிதக்கின்றன.
'ஏரியில் கழிவுநீர் கலப்பதால், மீன்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல், அவை இறக்கின்றன. கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்' என்றனர்.