ADDED : ஜூலை 27, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார : கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் ஊராட்சியில் 2 வயது பெண் குழந்தைக்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் சுகாதார துறையினர் முகாமிட்டு, டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.