/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துறை அலுவலர்கள் ' ஆப்சென்ட் ' கும்மிடி ஒன்றிய கூட்டத்தில் புகார்
/
துறை அலுவலர்கள் ' ஆப்சென்ட் ' கும்மிடி ஒன்றிய கூட்டத்தில் புகார்
துறை அலுவலர்கள் ' ஆப்சென்ட் ' கும்மிடி ஒன்றிய கூட்டத்தில் புகார்
துறை அலுவலர்கள் ' ஆப்சென்ட் ' கும்மிடி ஒன்றிய கூட்டத்தில் புகார்
ADDED : செப் 02, 2024 10:55 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், சேர்மன் சிவகுமார் தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலுவலக செலவுகள், திட்டங்கள், தொழிற்சாலை அனுமதி என மொத்தம், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கை மற்றும் புகார்களை முன் வைத்தனர்.
மெய்யழகன் , தி.மு.க.,: பெத்திக்குப்பம் - மங்காவரம், நத்தம் - ராக்கம்பாளையம் சாலைகள் ஓரம், புதர்கள் மண்டி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
புதர்களை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும். அரசு பேருந்து தடம் எண்: டி32, டி39, ஆகியவற்றை முறையாக இயக்க நடவடிக்கை வேண்டும்.
சீனிவாசன், தி.மு.க.,: தேசிய நெடுஞ்சாலையில், பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் இருந்து புதுகும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் சாலை, குறுகலாக உள்ளது.
எதிர் எதிரே இரு கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை. சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறையினரை வலியுறுத்த வேண்டும். புதுகும்மிடிப்பூண்டி சித்ரகூட் தொழிற்சாலையால், சுற்றியுள்ள பகுதி முழுதும் கருந்துகள்கள் படர்ந்து சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிட்டிபாபு, தி.மு.க.,: கூட்டத்தில் வருவாய், கல்வி, வேளாண் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றுஉள்ளனர்.
மின் துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, சுகாதாரம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கவில்லை.
இதனால் கூட்டத்தில் முன் வைக்கும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது. அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாதிரிவேடு மேற்கு பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அரசு விதிமுறைகளின் படி தேர்வு செய்யப்படவில்லை. பாதிரிவேடு ஊராட்சியில் முறையாக கொசு மருந்து அடிப்பதில்லை.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் சிவகுமார் தெரிவித்தார்.