/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாட்டுத் தொழுவமான குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
/
மாட்டுத் தொழுவமான குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
மாட்டுத் தொழுவமான குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
மாட்டுத் தொழுவமான குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2024 10:57 PM

திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான சோளீஸ்வரர் திருக்கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பத்தில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் திருக்குளம் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு குளம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக சிலர் திருக்குளம் சுற்றுச்சுவரில் மாடுகளை கட்டி வைத்து அசுத்தம் செய்து, தொழுவமாக மாற்றி வருகின்றனர்.
மாடு கட்டி வைப்பதால் சுற்றுச்சுவர் சேதமடைவது தொடர்வதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே, திருக்குளத்தை சுற்றி மாடுகளை கட்டுவதை தடுக்க, கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.