/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கால்வாய் தோண்டும் பணி 'விறுவிறு'
/
சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கால்வாய் தோண்டும் பணி 'விறுவிறு'
சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கால்வாய் தோண்டும் பணி 'விறுவிறு'
சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற கால்வாய் தோண்டும் பணி 'விறுவிறு'
ADDED : ஜூன் 20, 2024 01:08 AM

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலையில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், மழைநீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி, குளம் போல் உள்ளது.
இதற்கு காரணம், ரயில்வே நிர்வாக கால்வாய் வழியாக வெளியேறிய மழைநீர், திடீரென மூடப்பட்டது. இதனால், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், ம.பொ.சி.சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் சாலையில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கு சாலையோரம் கால்வாய் தோண்டும் பணியை நேற்று துவக்கினர். முதற்கட்டமாக தற்காலிக கால்வாய் வழியாக தண்ணீரை வெளியேற்றி, பின், அரசிடம் இருந்து நிதி வந்தவுடன் நிரந்தரமாக சாலையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு புதிதாக மழைநீர் கால்வாய் கட்டப்படும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.