/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த சுகாதார வளாகம் பெரியகளக்காட்டூரில் அவதி
/
பாழடைந்த சுகாதார வளாகம் பெரியகளக்காட்டூரில் அவதி
ADDED : ஜூன் 08, 2024 01:01 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில், 2010ம் ஆண்டு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம், 2015 -- 16ம் ஆண்டு ஒன்றிய நிதி 1 லட்சம் ரூபாயை கொண்டு பராமரிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின், ஊராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால், தற்போது பெண்கள் சுகாதார வளாகம் பாழடைந்து உள்ளது.
இதனால், இக்கிராம பெண்கள், கழிப்பறை இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய - மாநில அரசுகள், பல லட்சம் ரூபாய் செலவு செய்து சுகாதார வளாகங்களை கட்டிக்கொடுக்கும் நிலையில், பல ஊராட்சிகளில் அதை முறையாக பராமரிக்காததால் பாழடைந்து வருகிறது.
இதனால், பெண்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழித்து வருகின்றனர். மேலும், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே, சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.