/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவிழா அழைப்பில் தகராறு பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
/
திருவிழா அழைப்பில் தகராறு பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
திருவிழா அழைப்பில் தகராறு பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
திருவிழா அழைப்பில் தகராறு பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
ADDED : மே 29, 2024 06:25 AM
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 42. பா.ஜ., உயர்நிலைப்பிரிவு அமைப்பு சாரா மற்றும் தொழிலாளர் பிரிவு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலராக பதவி வகித்து வருகிறார்.
இவர் பட்டரை பகுதியில் நடந்த எல்லையம்மன் கோவில் திருவிழாவிற்கு திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., தலைவர் அஸ்வின் மற்றும் ஒன்றிய தலைவர் ரவிக்குமார் ஆகியோரை அழைத்ததன் பேரில் நேற்று முன்தினம் திருவிழாவிற்கு வந்து சென்றனர்.
இதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ., செயலர் பன்னீர்செல்வம் மற்றும் ஏகாட்டூர் கார்த்திக் புதுப்பட்டு பாலு, மணவாள நகர் ராஜா ஆகியோர் செந்தில் வீட்டிற்கு சென்று எங்களை திருவிழாவிற்கு அழைக்காமல் நீ எப்படி மாவட்ட தலைவரை அழைக்கலாம் என்று கூறி ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின்படி மணவாள நகர் போலீசார் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ, செயலர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.