/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடக்கநல்லுாரில் சாலை அமைப்பதில் இடையூறு
/
வடக்கநல்லுாரில் சாலை அமைப்பதில் இடையூறு
ADDED : ஜூன் 30, 2024 11:06 PM

ஆரணி: ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் செவிட்டு பனப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.
அங்கிருந்து, 500 மீட்டர் தொலைவில் வடக்கநல்லுார் கிராமம் அமைந்துள்ளது. அந்த இடைப்பட்ட பாதையில், பல ஆண்டுகளுக்கு முன் சாலை போடப்பட்டது. அதன்பின் சாலை பணிகள் மேற்கொள்ளப்படாததால், அந்த பாதை முழுதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
அவசரத்திற்கு மட்டும் அல்ல சாதாரண தேவைக்கு கூட அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் வடக்கநல்லுார் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். சோழவரம் ஒன்றிய நிர்வாகம், பொன்னேரி தாலுகா நிர்வாகம் துவங்கி கலெக்டர் வரை மனு கொடுத்தும் சாலை போட முடியாத நிலையில் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வடக்கநல்லுார் ஊராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு முன் தனியார் வழங்கிய பட்டா நிலத்தில் சாலை அமைக்கப்பட்டது. எழுத்து பூர்வமாக அந்த பாதை பதிவு செய்யப்படாததால், தற்போதைய தலைமுறையினர், அந்த பாதையை சொந்தம் கொண்டாடி, புதிய சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்' என்றார்.
வடக்கநல்லுார் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அந்த கிராமத்திற்கான முறையான சாலை வசதி ஏற்படுத்தி தருவது மாவட்ட நிர்வாகத்தின் கடமை. அதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.