/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடையை அகற்ற தி.மு.க., கவுன்சிலர் மனு
/
டாஸ்மாக் கடையை அகற்ற தி.மு.க., கவுன்சிலர் மனு
ADDED : செப் 17, 2024 10:52 PM

திருவள்ளூர்:பெரியகுப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, பகுதிவாசிகளுடன் தி.மு.க., பெண் கவுன்சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட, 26வது வார்டு பெரியகுப்பம் மேம்பாலம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்றக் கோரி, தி.மு.க., பெண் கவுன்சிலர் தனலட்சுமி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இதனால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இங்கு வந்து மது அருந்தி, குடிபோதையில், அரைகுறை ஆடையுடன் சுற்றித்திரிவதால், நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். அதிகமாக மக்கள் கூடும் இடத்தில், இதுபோன்ற டாஸ்மாக் கடைகள் இருப்பதால், எங்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுவரை நான்கு முறைக்கு மேல் நாங்கள் மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. உடனடியாக டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றி, வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.