/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தி.மு.க., வசமான திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்வானார் துணை தலைவர்
/
தி.மு.க., வசமான திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்வானார் துணை தலைவர்
தி.மு.க., வசமான திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்வானார் துணை தலைவர்
தி.மு.க., வசமான திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்வானார் துணை தலைவர்
ADDED : ஆக 07, 2024 02:38 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணி ஏழு வார்டுகளிலும், அ.தி.மு.க., ஆறு வார்டுகளிலும் வெற்றி பெற்றது.
பா.ம.க., மற்றும் சுயே., வேட்பாளர்கள் இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
சுயே., வேட்பாளர் பா.ஜ.,வில் இணைந்தார். தி.மு.க.,வைச் சேர்ந்த வடிவேல் தலைவராகவும், மகாதேவன் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பேரூராட்சி தலைவர் வடிவேல் விபத்தில் மரணமடைந்தார்.
இதையடுத்து துணைத்தலைவர் மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார்.
நேற்று திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசன் மேற்பார்வையில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் பா.ஜ.,வில் சேர்ந்த சுயே., உறுப்பினர் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதில் 9வது வார்டு பா.மக., மற்றும் 15வது வார்டு அ.தி.மு.க., என இரு வார்டு உறுப்பினர்கள் ஆதரவுடன் எட்டு ஓட்டுகள், பெற்று தி.மு.க., மீண்டும் தலைவர் பதவியை கைப்பற்றியது.
இதையடுத்து, மகாதேவன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் செயல் அலுவலர் வெங்கடேசன் அறிவித்தார்.
வெற்றி பெற்ற மகாதேவனுக்கு முன்னாள் அமைச்சர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தலை முன்னிட்டு, உதவி கமிஷனர் தனசெல்வன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் வெள்ளவேடு ஐயப்பன், நசரத்பேட்டை சாய்கணேஷ், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையம் லில்லி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 10:00-11:00 மணி வரை பேரூராட்சி அலுவலகம் உள்ள பகுதி முற்றிலும் தடை செய்யப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.