/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புள்ளிமானை கடித்து குதறிய நாய்கள்
/
புள்ளிமானை கடித்து குதறிய நாய்கள்
ADDED : மே 02, 2024 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி காப்புக் காட்டில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால், அங்குள்ள மான்கள் தண்ணீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்கின்றன.
நேற்று மதியம், வெங்கல் அருகே உள்ள காதிர்வேடு கிராமத்தில் ஒரு புள்ளி மான் வேகமாக அங்கும், இங்குமாக ஓடியது.
அங்குள்ள நாய்கள் மானை பார்த்து ஓடின. மானை கடித்து விடப்பபோகிறது என அறிந்த கிராம மக்கள் நாய்களை துரத்தினர். ஆனால் நாய்கள் துரத்திக் கொண்டு போய் மானை கடித்து குதறின. கழுத்து, உடல், கால் ஆகியற்றில் பலத்த ரத்த காயம் அடைந்த மான் அங்கேயே இறந்தது.