/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு மனை கேட்டு நாடக கலைஞர்கள் மனு
/
வீட்டு மனை கேட்டு நாடக கலைஞர்கள் மனு
ADDED : ஜூன் 27, 2024 01:35 AM

திருவள்ளூர்:தமிழக நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கத்தினர், நேற்று முன்தினம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை இரவு, பகல் பாராமல் மக்கள் மத்தியில், நாடகம் மற்றும் நடன கூத்தாடி பாதுகாத்து வருகிறோம். தமிழக அரசின் திட்டம் உட்பட, பல்வேறு நல்லெண்ணத்தை மக்களிடம் நாடகம், கூத்து வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
ஆனால், நாடக கலைஞர்களான எங்களுக்கு அடிப்படை வசதி எதுவும் கிடைப்பதில்லை. பலர், சொந்த வீடு இல்லாமல், வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம்.
அரசின் சலுகைகள் எங்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வீட்டுமனை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார்.