/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் உயிரிழப்பு
ADDED : மே 07, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த ஆர்.பி.கண்டிகையைச் சேர்ந்தவர் கண்ணாயிரம், 56. இவர், திருத்தணி பேருந்து பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
தற்போது, மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை தன்னுடைய வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, வயல்வெளியில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது தவறுதலாக உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீசார், கண்ணாயிரத்தின் சடலத்தை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.