ADDED : மார் 25, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில், திருத்தணி பீகாக் மருத்துவமனை மற்றும் ஸ்ரீகிரண் அறக்கட்டளை சார்பில் போதைப்பொருள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகிரண் மற்றும் மனநல மருத்துவர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று, கல்லுாரி மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர். தனியார் நர்சிங் கல்லுாரி முதல்வர் பத்மாவதி, பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

