/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
/
போதை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
ADDED : பிப் 26, 2025 07:07 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் இருந்து, தமிழக பகுதியான பென்னலுார்பேட்டை வழியே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக, எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.
திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, பென்னலுார்பேட்டை போலீசார், பென்னலுார்பேட்டையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான ஹான்ஸ் 600 பாக்கெட், கூலிப், 300, விமல், 832, விஐ, 208 என, மொத்தம் 1,940 பாக்கெட் இருந்தது. மதிப்பு 5 லட்சம் ரூபாய். இது தொடர்பாக காரில் இருந்த, பெரியபாளையம் பவன்குமார், 25, ஆந்திர மாநிலம், புத்துார், ராமசமுத்திரம் நரேந்திரன், 31, ஆகிய இருவரை, நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட இருவரையும், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.