/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்து எட்டு பேர் படுகாயம்
/
பள்ளத்தில் கார் கவிழ்ந்து எட்டு பேர் படுகாயம்
ADDED : மே 28, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த சென்றபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 22. இவர் கடந்த 26ம் தேதி உறவினர்களுடன் மகேந்திரா பொலிரோ காரில் திருத்தணி சென்று விட்டு சென்னை அம்பத்துார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருப்பதி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பாண்டூர் பெட்ரோல் பங்க் அருகே வந்த கார் எதிரே வந்த லாரியின் வெளிச்சத்தில் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த ரஞ்சித், டில்லிபாபு உட்பட எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.