ADDED : பிப் 24, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், பூனிமாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாய்கணேஷ், 49; இவர், 'ஹூண்டாய்' காரில், நேற்று முன்தினம், திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பாண்டூர், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, எதிரே சித்துாரிலிருந்து, திருவள்ளூர் நோக்கி வந்த, 'மாருதி பொலினோ' கார் நிலை தடுமாறி, 'ஹூண்டாய்' கார் மீது மோதியது.
இதில், 'மாருதி பொலினோ' காரில் வந்த சென்னை குமணன்சாவடி பகுதியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன், 45, தேவராஜன், 78, சுப்புலட்சுமி, 42, ஸ்ரீஜோதி, 51 ஆகியோர் படுகாயமடைந்தனர். சாய்கணேஷ் லேசான காயமடைந்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, தேவராஜன் உயிரிழந்தார்.

