/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்தல் பணி செயல்பாடு பார்வையாளர் ஆலோசனை
/
தேர்தல் பணி செயல்பாடு பார்வையாளர் ஆலோசனை
ADDED : மார் 28, 2024 08:47 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியில் அதிகாரிகளின் செயல்பாடு, நடவடிக்கை குறித்து, தேர்தல் பொது பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திருவள்ளூர் லோக்சபா தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான், தேர்தல் பணிகளில் செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர், ஆவடி காவல்ஆணையர் சங்கர், திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட மொத்த வாக்காளர், தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தியது முதல், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரம், பிளக்ஸ் பேனர்கள் அகற்றிய விபரம், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் குறித்து, விபரம் கேட்டறிந்தார்.
பதற்றமான ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கை, கட்டுப்பாட்டு மையங்களின் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் செயல்பாடு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி சுகபுத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நியமனம்
திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் மத்திய தேர்தல் போலீஸ் பார்வையாளராக, உதய் பாஸ்கர் பில்லா தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி மற்றும் மாதவரம் பகுதிகளில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவார். அவர் நேற்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கரை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் பங்கேற்றார்.

