/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கு 6 மாதமாக சம்பளம் இல்லை
/
தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கு 6 மாதமாக சம்பளம் இல்லை
தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கு 6 மாதமாக சம்பளம் இல்லை
தேர்தல் பிரிவு பணியாளர்களுக்கு 6 மாதமாக சம்பளம் இல்லை
ADDED : ஜூலை 09, 2024 11:14 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆவடி ஆகிய ஒன்பது தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அலுவலகங்களில் செயல்பட்டு வரும், தேர்தல் பிரிவில் மொத்தம் 40 பேர் எழுத்தர்களாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினசரி 470 ரூபாய் வீதம் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரிவு ஒப்பந்த எழுத்தர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்பட வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்தல் பிரிவில் பெரும்பாலான பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து தேர்தல் பிரிவில் எழுத்தர்களாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள நிலுவை தொகை வழங்க வேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.