/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
/
மின் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஆக 02, 2024 02:56 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரம் கிராமத்தில் வசித்தவர் ரவி, 52. கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில், ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்துவந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. மொபைல்போனில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், இரவு அவரது உறவினர் ஒருவர், கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் சென்று பார்த்தார்.
அங்கு ஒப்பந்த பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது, மின்விசிறியில் ரவி துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், ரவியின் மொபைல்போன் மற்றும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.