/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாயில் மின்மாற்றி மின்வாரிய ஊழியர்கள் அவதி
/
கழிவுநீர் கால்வாயில் மின்மாற்றி மின்வாரிய ஊழியர்கள் அவதி
கழிவுநீர் கால்வாயில் மின்மாற்றி மின்வாரிய ஊழியர்கள் அவதி
கழிவுநீர் கால்வாயில் மின்மாற்றி மின்வாரிய ஊழியர்கள் அவதி
ADDED : ஜூலை 24, 2024 01:39 AM

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டையில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இப்பகுதியில் மின்மாற்றிகளைச் சுற்றி கழிவுநீர் கால்வாய் உள்ளதால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் சீரமைப்பில் மின்வாரிய ஊழியர்கள் திணறுகின்றனர்.
மின்சாரம் தடைபட்டால் தொழிற்சாலைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
சில நேரங்களில் விபத்தில் சிக்குவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மின்மாற்றிகளை வேறிடத்திற்கு மாற்றவோ அல்லது கழிவுநீர் கால்வாயை மாற்றியமைக்கவோ தகுந்த நடவடிக்கை வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.