/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர் காலி பணியிடம் நிரப்ப வலியுறுத்தல்
/
ஆசிரியர் காலி பணியிடம் நிரப்ப வலியுறுத்தல்
ADDED : ஜூன் 24, 2024 11:34 PM
திருவள்ளூர் : தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவள்ளூரில் நேற்று முன்தினம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் மற்றும் ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் பேசியதாவது:
பழைய பென்ஷன் திட்டம் நடைமுறை படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். மத்திய அரசு பணியாளருக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
பழைய நிலையில் சீனியாரிட்டி ஒன்றிய அளவில் நடைமுறை படுத்த வேண்டும். தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் தரவேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையினை, தமிழக அரசு ஏற்று அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.