/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் காலியாக இருக்கும் குடிநீர் தொட்டி
/
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் காலியாக இருக்கும் குடிநீர் தொட்டி
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் காலியாக இருக்கும் குடிநீர் தொட்டி
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் காலியாக இருக்கும் குடிநீர் தொட்டி
ADDED : ஏப் 17, 2024 11:29 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் ராஜாஜி சாலையில் திரு.வி.க., பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்குன்றம், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும், இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு, 50,000த்திற்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பயணியர்தேவைக்காக, பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தொட்டியில் குடிநீர் நிரப்பாததால், காலியாக உள்ளது. கிராமங்களில் இருந்து வரும் ஏழை, எளியோர் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
தற்போது, கோடை வெயில் அதிகமாக உள்ள நிலையில், குடிநீருக்காக அருகில் உள்ள கடைகளில், பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.