ADDED : மார் 10, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,எல்லாபுரம் ஒன்றியம் லட்சிவாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் நிலை இருந்தது. இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்தது தெரிந்தது.
'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்வரத்து கால்வாய் மீட்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கால்வாய் மீட்கப்பட்டது, அப்பகுதி விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.