/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் ஈரோடு பக்தர் பலி
/
திருத்தணி கோவிலில் ஈரோடு பக்தர் பலி
ADDED : ஆக 07, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா தேவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன், 55. இவர், நேற்று காலை திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடிப்பூரம் விழாவில் பங்கேற்க, திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
பின், மலைக்கோவிலுக்கு ஆட்டோவில் பயணம் செய்த போது, திடீரென தியாகராஜனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவ்வழியாக சென்ற பக்தர்கள் தியாகராஜனை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.