/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் முகத்துவார நிலைப்படுத்தும் சுவர்
/
2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் முகத்துவார நிலைப்படுத்தும் சுவர்
2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் முகத்துவார நிலைப்படுத்தும் சுவர்
2 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் முகத்துவார நிலைப்படுத்தும் சுவர்
ADDED : பிப் 24, 2025 02:14 AM

சென்னை:'திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், முகத்துவார நிலைப்படுத்தும் சுவர் அமைக்கும் பணி 92 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது' என, மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், கடலும், ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக, மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். கடல் சீற்றத்தாலும், பருவநிலை மாற்றத்தினாலும், மண் திட்டுக்கள் உருவாகி, முகத்துவாரம் அடைத்து, மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
உப்பு தண்ணீரானது, கடலுக்குள் சென்று வந்தால் தான் ஆக்ஸிஜன் இருக்கும். அப்போது தான் அங்கு இறால் வளர்ப்புக்கும், மீன் பிடிப்பிற்கும் சாதகமான சூழ்நிலை இருக்கும் என, மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் அடிப்படையில், நபார்டு வங்கி நிதி உதவியின் கீழ், 27 கோடி ரூபாயில் நிரந்தர, முகத்துவார நிலைப்படுத்தும் சுவர் அமைக்க, கடந்த 2020ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கடந்த 2024ம் ஆண்டு இதற்கான பணி துவங்கப்பட்டது. கற்கள் எடுத்துச் செல்லும் வசதிக்காக, 4.5 கிலோ மீட்டருக்கு அணுகு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:
தடுப்பு சுவர் அமைக்கும் பணியை 18 மாதங்களில் முடிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கப்பட்ட பணி, 13 மாதங்களில் 92 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால், மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

