ADDED : மே 09, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி சமேத திரிபுராந்தகர் கோவில். இக்கோவில் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த பிரபாகரன், அரக்கோணம் அடுத்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் செயல் அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தமிழ்நாடு அரசுப்பணி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரிபுர சுந்தரி சமேத திரிபுராந்தகர் கோவில் செயல் அலுவலராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.