ADDED : ஏப் 14, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர்:போரூரில் தனியாருக்கு சொந்தமான மொபைல் போன்கள் பழுது பார்க்கும் கடை இயங்கி வருகிறது. நேற்று வாடிக்கையாளர் ஒருவர், தன்னுடைய மொபைல் போனை பழுது பார்ப்பதற்காக கடைக்கு சென்றார். அப்போது கடை உரிமையாளர் மொபைல் போனை பழுது பார்த்தபோது, திடீரென அந்த மொபைல் போன் பேட்டரியில் இருந்து அதிகப்படியான புகை வந்துள்ளது.
புகை வந்த அடுத்த சில வினாடிகளில், மொபைல் போன் வெடித்து சிதறியது. இதையடுத்து கடை உரிமையாளர் அந்த மொபைல் போனை வெளியே வீசினார்.
இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பகிரப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக மொபைல் போன் வெடித்ததில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

