ADDED : ஜூலை 23, 2024 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பேரிட்டிவாக்கத்தில் ஊராட்சி நிர்வாகம், சின்மய கிராம மேம்பாட்டு அமைப்பு மற்றும் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல் ஆட்டோ மெட்ரி சர்வீஸ் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார் துவக்கி வைத்தார். இதில் மருத்துவர் ஜனனி தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், கண் பரிசோதித்தனர். 50க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. பேரிட்டிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைந்தனர்.