/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி பலி
/
தொழிற்சாலை விபத்து தொழிலாளி பலி
ADDED : ஜூலை 26, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜோஷிகுமார், 21.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வேலையில் இருந்த போது, ஒரு டன் எடை கொண்ட இரும்பு ரோல் ஒன்று உருண்டு வந்து அவர் மீது விழுந்துள்ளது. அதே இடத்தில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.