/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தானியம் பிரித்தெடுக்க களத்து மேட்டில் மின்விசிறி
/
தானியம் பிரித்தெடுக்க களத்து மேட்டில் மின்விசிறி
ADDED : செப் 04, 2024 02:36 AM

ஆர்.கே.பேட்டை:விவசாயிகள் கதிரடிக்கவும், கதிரில் இருந்து பிரித்த தானியங்களை சுத்தமாக பதர் நீக்கி சேகரிக்கவும் களத்து மேட்டில் தற்போது தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
தானியங்களில் இருந்து பதர் நீக்க, காற்றுள்ள போதே துாற்றிக் கொள்வது வழக்கம்.
இதை அடிப்படையாக கொண்டே வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில், 'காற்றுள் போதே துாற்றிக்கொள்' என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகள், களத்து மேட்டில், மின்விசிறியை பயன்படுத்தி வருகின்றனர். மின்விசிறியை இயக்கி, தானியங்களில் இருந்து பதர் நீக்கி சுத்தம் செய்து வருகின்றனர்.
வேளாண்மையில் தொழில்நுட்ப சாதனங்கள் ஏராளமாக பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றே என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.