/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை
/
நெற்பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை
ADDED : செப் 09, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்தில் வசித்தவர் மாசிலாமணி, 64. விவசாயி. இம்மாதம், 3ம் தேதி, நெற்பயிருக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். நெற்பயிருக்கு அதிக அளவில் பூச்சி மருந்து அடித்ததில், இரண்டு ஏக்கர் நெற்பயிர்கள் கருகியதால் மன உளைச்சலில் அவர், தற்கொலை செய்தது தெரிந்தது.
ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.