ADDED : ஜூன் 18, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: வெங்கல் அருகே, குறுவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாளையம், 52. விவசாயி. கடந்த, 15ம் தேதி குறுவாயல் கிராமத்தில் உள்ள வயலில் டிராக்டர் மூலம் ஏர் உழுது கொண்டு இருந்த நபர், வரப்பில் நின்று கொண்டு இருந்த பாளையம் மீது மோதி விட்டார்.
பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.