/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் கொள்முதல் நிலையம் கட்டித்தர கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
/
நெல் கொள்முதல் நிலையம் கட்டித்தர கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையம் கட்டித்தர கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
நெல் கொள்முதல் நிலையம் கட்டித்தர கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 21, 2024 09:18 PM
திருவள்ளூர்:நெல் கொள்முதல் செய்வதற்கு, புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஒன்றியம், சென்றாயன்பாளையம் கிராம விவசாயிகள் சார்பில், கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
பூண்டி ஒன்றியம் சென்றாயன்பாளையம் கிராமத்தில், இ சேவை மைய கட்டடத்தில், நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த கட்டடத்தில், மகளிர் குழுவினர் அனுமதியுடன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்றாயன்பாளையம், திருப்பேர், பிளேஸ்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அறுவடை செய்யப்படும் நெல்மணிகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சில சமயம் மகளிர் குழுவினர் இங்கு நெல் கொள்முதல் நிலையம் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள், நெல் மணிகளை விற்பனை செய்ய சிரமத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது. எனவே, சென்றாயன்பாளையம் கிராமத்தில் நெல் கொள்முதல் செய்ய, தனி கட்டடம் கட்டித் தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.