/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உறுப்பு தானம் செய்த பெண் உடல் நல்லடக்கம்..
/
உறுப்பு தானம் செய்த பெண் உடல் நல்லடக்கம்..
ADDED : ஜூலை 22, 2024 06:04 AM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி நிர்மலா, 49. கடந்த சில தினங்களுக்கு முன், நிர்மலாவிற்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த, 19ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் விருப்பபடி நிர்மலாவின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
நேற்று முன்தினம், அவரது உடல் நத்தம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், அதிகாரிகளுடன் சென்று நிர்மலாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.