/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாந்தி, பேதியால் பெண் பலி; பில்லாக்குப்பத்தில் முகாம்
/
வாந்தி, பேதியால் பெண் பலி; பில்லாக்குப்பத்தில் முகாம்
வாந்தி, பேதியால் பெண் பலி; பில்லாக்குப்பத்தில் முகாம்
வாந்தி, பேதியால் பெண் பலி; பில்லாக்குப்பத்தில் முகாம்
ADDED : ஆக 02, 2024 07:13 AM
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது பில்லாக்குப்பம் கிராமம். அங்கு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில், 90 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள், பல நாட்களாக வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகிறது. சுகாதாரமற்ற தண்ணீர் பருகியதால், கடந்த இரு மாத காலமாக கிராம மக்கள் உடல் நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகமும் கண்டுக்கொள்ளவில்லை. நேற்று முன்தினம், வாந்தி, பேதியால், கிருஷ்டம்மா, 53, என்ற பெண் உயிரிழந்தார்' என்றனர்.
தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், பில்லாக்குப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து, அப்பகுதியில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர். சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.