/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு உதவிபெறும் பள்ளி மாணவியருக்கு நிதியுதவி
/
அரசு உதவிபெறும் பள்ளி மாணவியருக்கு நிதியுதவி
ADDED : ஆக 01, 2024 12:20 AM
திருவள்ளூர்:அரசு உதவிபெறும் பள்ளி மாணவியருக்கும், புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, தொழிற்கல்வி உள்ளிட்ட மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும், புதுமைப்பெண் திட்டத்தில், மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவியர் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இதன் வாயிலாக கூடுதலாக உதவித்தொகை பெறலாம். புதுமைப்பெண் திட்டம் 2024 -- 25ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு உதவிபெறும் பள்ளி மாணவியருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
எனவே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கணக்கு துவங்கி, வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். மேலும், கல்லுாரிகளில் நியமிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்ட 'நோடல்' அதிகாரி வாயிலாக இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.