/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
ADDED : ஆக 09, 2024 12:51 AM
திருவள்ளூர்:'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம், வரும், 21ல் பொன்னேரி வட்டத்தில் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களை தேடி அரசு துறை அலுவலர்கள் நேரில் மக்களை நாடி, அவர்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதம் மூன்றாவது புதன் கிழமையன்று ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், இம்மாதம், கள ஆய்வு பொன்னேரி வட்டத்தில், வரும், 21ல் நடக்கிறது. இதில் கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.