/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை
/
பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை
பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை
பழவேற்காட்டில் ரூ.10 லட்சம் மீன்பிடி வலைகள் தீக்கிரை
ADDED : ஜூலை 25, 2024 12:17 AM

பழவேற்காடு:திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில், 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் பாரம்பரியமாக கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை அரங்கம்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களின் வலைகள் பாதுகாக்கப்படும் இடத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், 10 மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் தீக்கிரையானது. இதன் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் வலைகளுக்கு தீ வைத்தனரா அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.