/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் உண்டியலை திருடிய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது
/
கோவில் உண்டியலை திருடிய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது
கோவில் உண்டியலை திருடிய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது
கோவில் உண்டியலை திருடிய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் கைது
ADDED : மார் 04, 2025 12:27 AM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, தண்டலம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், கடந்த 19ம் தேதி இரவு, உண்டியல் திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. அதேபோல, ராஜபாளையம், முக்கரம்பாக்கம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இது தொடர்பாக தனிப்படை போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,க்கள் ராவ்பகதுார், செல்வராஜ், ஏட்டு ராஜன், மந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர், 'சிசிடிவி' கேமரா வாயிலாக தீவிரமாக தேடி வந்தனர்.
சந்தேகத்தின்படி, பாலவாக்கம் முகிலன், 22, நாகராஜ், 22, விஜய், 21, மற்றும், 17 வயது சிறுவர்கள் இருவர், என, மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று பேரை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவர் சைதாப்பேட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்.