/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ்களை மறித்து தகராறு செய்த ஐவர் கைது
/
அரசு பஸ்களை மறித்து தகராறு செய்த ஐவர் கைது
ADDED : ஜூன் 22, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை நோக்கி மதியம் 12:00 மணி மற்றும் மாலை 3:00 மணிக்கு, இரண்டு அரசு பேருந்துகள் சென்றன.
புல்லரம்பாக்கம் அருகே வந்த போது, இரண்டு பேருந்துகளையும் ஐந்து பேர் கும்பல் மறித்து, ஓட்டுனர்களை மிரட்டினர்.
தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் எஸ்.ஐ., நாகபூஷணம் வந்து விசாரணை நடத்தி, அரசு பேருந்துகளை மறித்து தகராறில் ஈடுபட்ட, பூதுாரைச் சேர்ந்த சரண், 24, புல்லரம்பாக்கம் பிரதாப், 26; ராஜன், 27, அபினேஷ், 21 மற்றும் 17 வயதுசிறுவன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.