/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பாச்சூர் சாலையில் மேம்பாலப்பணி மந்தம்
/
திருப்பாச்சூர் சாலையில் மேம்பாலப்பணி மந்தம்
ADDED : மே 16, 2024 12:31 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சி கூவம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் கொண்டஞ்சேரி வழியாக சத்தரை பகுதியில் கூவம் ஆற்றில் கலக்கிறது.
இதில் கொண்டஞ்சேரி பகுதியில் கூவம் ஏரி நீர் வரும் பகுதியில் உள்ள தரைப்பாலம் நீர் அதிகமாக வரும்போது போக்குவரத்து பாதிக்கப்படும்.
இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து தமிழக அரசு இப்பகுதியில் 2.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்ட உத்தரவிட்டது.
இதையடுத்து இரண்டு மாதத்தில் நிறைவேற்றும் வகையில் கடந்த மார்ச்சில் துவங்கிய மேம்பால பணி தற்போது மந்தகதியில் நடந்து வருகிறது. இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.